தேசிய மீன்வள கொள்கையை திரும்ப பெறக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்


தேசிய மீன்வள கொள்கையை திரும்ப பெறக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2020 2:44 AM IST (Updated: 9 Sept 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மீன்வள கொள்கையை திரும்ப பெறக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்.

அரியாங்குப்பம்,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீன்வள கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுச்சேரி மீனவர் விடுதலை வேங்கை அமைப்பினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி நேற்று வீராம்பட்டினம் கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நிறுவன தலைவர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார். மீனவ பெண்கள், அரியாங்குப்பம் திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இவர்கள் கடலில் இறங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story