மாவட்ட செய்திகள்

குணமடைவோர் அதிகரிப்பு: ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை + "||" + Increase in healers: Corona test for 2 thousand people in one day

குணமடைவோர் அதிகரிப்பு: ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை

குணமடைவோர் அதிகரிப்பு: ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
புதுவையில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுச்சேரி,

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 440 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 446 பேர் குணமடைந்து உள்ளனர்.


புதுவையில் கடந்த 4-ந்தேதி 1,846 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுவே அதிகபட்ச சோதனையாக இருந்தது. ஆனால் தற்போது மத்தியக்குழு சோதனையை அதிகரிக்க வலியுறுத்தியதை தொடர்ந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 81 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களைவிட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

12 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 85 ஆயிரத்து 906 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 66 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 17 ஆயிரத்து 749 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 831 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

அதாவது 1,775 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 56 பேர் வீடுகளில் தனிமைப்படுத்துப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 ஆயிரத்து 581 பேர் குணமடைந்துள்ளனர். 337 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குணமடைந்தோர் விகிதம்

புதுவை மாநிலத்தில் இதுவரை இறந்தவர்களில் 285 பேர் புதுச்சேரியையும், 19 பேர் காரைக்காலையும், 32 பேர் ஏனாம் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர். மாகி பகுதியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. புதுவையில் உயிரிழப்பு என்பது 1.90 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 70.88 ஆகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்தது 67 பேருக்கு மட்டுமே தொற்று
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 67 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்பு 4 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 4 பேர் பலியானார்கள்.
3. தமிழகத்தில் ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று 9-வது நாளாக பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
4. மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு
மாகி பிராந்தியத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
5. கர்நாடகத்தில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா மேலும் 66 பேர் சாவு
கர்நாடகத்தில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 66 பேர் இறந்துள்ளனர்.