காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்: கடலில் குதித்து வாலிபர் தற்கொலை
காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதமாக வாலிபர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியாங்குப்பம்,
வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40), கொத்தனார். இவருடைய மகன் ராஜா (19), பெயிண்டர். கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்ற அவர், வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ராஜாவின் மோட்டார் சைக்கிள் அரியாங்குப்பம் அருகே சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் நிற்பதற்காக அவருடைய தந்தை பன்னீர்செல்வத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு வந்து பார்த்து அதை உறுதி செய்தார்.
உடல் கரை ஒதுங்கியது
இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் வழக்குப்பதிவு செய்து சின்ன வீராம்பட்டினம் மீனவர்களிடம் விசாரித்தனர். இதில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் கடலில் இறங்கியதாக தெரிவித்தனர். அவர் காணாமல் போனதாக கூறப்பட்ட ராஜாவாக இருக்க லாம் என கருதி போலீசார் அவரை தேடினர்.
நேற்று 2-வது நாளாக கடலோர காவல்படை மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் ராஜாவை தேடியபோது சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கி யது. உடலை கடலோர காவல்படையினர் மீட்டு அரியாங்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதலியுடன் தகராறு
சம்பவத்தன்று ராஜா தனது காதலியுடன் சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு அவர்கள் இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story