பெற்றோர், உறவினர், நண்பர்களை விட மாணவர்களை பொறுப்புள்ள குடிமகனாக மாற்றுவதில் ஆசிரியர் பங்கு முதன்மையானது - கலெக்டர் பேச்சு
பெற்றோர், உறவினர், நண்பர்களை விட மாணவர்களை பொறுப்புள்ள குடிமகனாக மாற்றுவதில் ஆசிரியர் பங்கு முதன்மையானது, என நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் 5 ஆசிரியர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி நல்லாசிரியர் விருது பெற்ற பரதராமி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லதா, கரிகிரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, காட்பாடி காந்திநகர் ஆக்சீலியம் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியமேரி, குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளி ஆசிரியர் கீதா ஆகிய 4 பேருக்கு விருது வழங்கினார். அப்போது கலெக்டர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 1,276 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 11 ஆயிரத்து 344 ஆசிரிய-ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். மாணவர்களை நல்வழிப்படுத்தும் தலைசிறந்த பணியை ஆசிரியர்கள் செய்கிறார்கள். தொடக்கப்பள்ளி மாணவர்கள் அதிக நேரத்தை ஆசிரியர்களுடன் செலவழிக்கிறார்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
மாணவர்களை கல்வியில் சிறந்து விளங்கவும், பொறுப்புள்ள குடிமகனாக மாற்றுவதில் சமூகத்தில் பெற்றோர், உறவினர், நண்பர்களை விட ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது. இன்று உலகின் பல்வேறு இடங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மாணவ பருவத்தில் ஆசிரியர்களின் கண்டிப்புடன் வளர்ந்தவர்கள் தான். எனவே மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியை ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ராஜன், கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story