திருவள்ளூர் அருகே பெண்ணை தாக்கிய 5 பேர் கைது
திருவள்ளூர் அருகே பெண்ணை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அருணா (வயது 42). நேற்று முன்தினம் அருணா வீட்டில் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அருங்குளம் காலனியை சேர்ந்த முத்து (24), தனஞ்செழியன் ( 22), வெங்கடேசன்( 35), ரகு (35), திருமலை ( 30) ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அருணாவை தகாத வார்த்தையால் பேசி கையாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு சென்றனர்.
கைது
இது குறித்து அருணா கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து, தனஞ்செழியன், வெங்கடேசன், ரகு, திருமலை ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story