தூத்துக்குடியில் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க சங்கிலி பறிப்பு


தூத்துக்குடியில் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2020 5:27 AM IST (Updated: 9 Sept 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி முருகலட்சுமி (வயது 40). இவர் நேற்று முன்தினம் காலையில் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பருப்பு மில் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் முருகலட்சுமியின் மொபட்டை மிதித்ததாக கூறப்படுகிறது.

தாலி சங்கிலி பறிப்பு

இதில் நிலைதடுமாறிய முருகலட்சுமி கீழே விழுந்தார். உடனடியாக மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய மர்ம நபர் முருகலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து அவர் இறுக்க பிடித்துக் கொண்டார். இதனால் சங்கிலி அறுந்து, சுமார் 2½ பவுன் தங்க சங்கிலியுடன் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story