கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Sep 2020 1:22 AM GMT (Updated: 9 Sep 2020 1:22 AM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களான ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன், நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன், எல்ராம்பட்டு கலைமகள் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி, உளுந்தூர்பேட்டை டேனிஷ் மிஷன் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கிறிஸ்டோபெல் ஜெயகீதம், ரிஷிவந்தியம் டி.எம்.நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜான்சுகுனதாஸ், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் அய்யனார் ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர்குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ., பிரபு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா வரவேற்றார். விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 6 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி, பாராட்டினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், நகர செயலாளர் பாபு, மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இராம.ஞானவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, கூட்டுறவு சங்க தலைவர் ரங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story