ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு


ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் - எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Sept 2020 9:00 AM IST (Updated: 9 Sept 2020 8:55 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கடலூர்,

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 8-ந் தேதி (அதாவது நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், பண்ருட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்.கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டு, மாணவர் அணி பிரவீன், கோபாலகிருஷ்ணன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் மதிவாணன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி வயலூர் பழனிசாமி, நகர பொதுக்குழு உறுப்பினர் பழக்கடை முபாரக், தகவல் தொழில்நுட்ப தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், நகர இளைஞரணி நூர்பாட்ஷா, வெங்கடேஷ், ஜெகதீஸ், முத்து, மாணவர் அணி துரைராஜ், தீபன்ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலத்தில் தி.மு.க.சார்பில் மற்றொரு இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் தலைமை தாங்கினார். வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், மாணவரணி கார்த்தி, பிரபு, நகர நிர்வாகி முருகன், வட்ட இளைஞரணி பிரவீன், அசோக், தமிழ்சசெல்வன், மணி, சர்தார் உட்பட பலர் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

விருத்தாசலம் கடைவீதியில் தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் அப்துல்லா, மதிவாணன், பாஸ்கரன், பிரவீன், கார்த்தி, சத்யராஜ் முபாரக்அலி, சஞ்சய் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர தி.மு.க. மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் ஸ்ரீமுஷ்ணம் பழைய காவல் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் தங்க.ஆனந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், இளைஞரணி வீரவேல், நகர மாணவரணி அமைப்பாளர் சாமிநாதன், ப.பூவராகமூர்த்தி, த.பூவராகமூர்த்தி, வேலா.பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

காட்டுமன்னார்கோவில் அருகே முட்டத்தில் ஒன்றிய இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.ஆர்.கே. கல்வி குழும தலைவர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜாபர் அலி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story