கள்ளக்காதலை கண்டித்த மகனுக்கு கத்திக்குத்து - தந்தை கைது


கள்ளக்காதலை கண்டித்த மகனுக்கு கத்திக்குத்து - தந்தை கைது
x
தினத்தந்தி 9 Sept 2020 9:30 PM IST (Updated: 9 Sept 2020 9:27 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகனை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சொர்ணநாதன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது61). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாவித்திரி. மகன் சதீஷ்குமார் (30), மகள் பிரதீபா. பிரதீபாவுக்கு திருமணமாகி கத்தார் நாட்டில் கணவருடன் வசித்துவருகிறார். தேவகோட்டையில் உள்ள சுப்பிரமணி-சாவித்திரி இடையே அடிக்கடி கணவரின் கள்ளத்தொடர்பு காரணமாக தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் சாவித்திரி கணவருடன் கோபித்துக்கொண்டு கத்தார் நாட்டில் வசிக்கும் மகள் பிரதீபா உடன் வசித்து வருகிறார்.சதீஷ்குமார் பி.இ. படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டில் தந்தையுடன் இருந்து வந்தார். அவர்களது வீட்டில் ஒரு பெண் வேலை செய்து வந்தார். அந்த பெண்ணுடன் சுப்பிரமணியனுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சதீஷ்குமார் தந்தையை கண்டித்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு என்னை கண்டிக்கிறாயா எனக்கேட்டு கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தினார்.இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தார்.

Next Story