“பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும்“ கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு


“பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும்“ கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 9 Sept 2020 11:25 PM IST (Updated: 9 Sept 2020 11:25 PM IST)
t-max-icont-min-icon

“பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும்“ என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் கண் வங்கி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கண்தான இருவார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கண்தானம் வழங்கியவர்களின் உறவினர்களை கவுரவிக்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி கண்தானம் செய்தவர்களின் உறவினர்கள் 20 பேரை கவுரவித்து சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களிடம் கண்தானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கண்தான விழிப்புணர்வு இரு வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும். கண்தானத்தின் மூலம் கண் பார்வையற்ற ஒருவர் கண் பார்வை பெற்று அவரது வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகமானவர்கள் கண்தானம் செய்ய முன்வர வேண்டும். கண்தானம் செய்துள்ள நீங்கள் உங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன், உதவி உறைவிட மருத்துவர் மகிழ்ஜான், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை கண் மருத்துவ பிரிவு தலைவருமான குமார சுவாமி, குழந்தைகள் நல டாக்டர் குமரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story