திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 281 பேர் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 281 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Sept 2020 4:34 AM IST (Updated: 10 Sept 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 281 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 281 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 27 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 762 பேர்ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1905 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 455 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 9 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் குறிஞ்சி தெருவில் வசிக்கும் 65 வயது மூதாட்டி, கூடுவாஞ்சேரி ஜெயா நகரை சேர்ந்த 36 வயது ஆண், மறைமலைநகர் கண்ணதாசன் தெருவை சேர்ந்த 32 வயது வாலிபர், வண்டலூர், ஊரப்பாக்கம், ஒத்திவாக்கம், உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று 237 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 468 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 799 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 238 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 277 ஆக உயர்ந்தது. 1284 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story