கோவில்பட்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை


கோவில்பட்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Sept 2020 5:01 AM IST (Updated: 10 Sept 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் நாற்கரசாலையில் இருந்து மந்திதோப்புக்கு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அங்குள்ள தரைமட்ட கிணற்றில் நேற்று மாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி, இறந்தவரின் உடலை மீட்டனர். இறந்தவர் வெள்ளை நிற சட்டையும், நீல நிற லுங்கியும் அணிந்து இருந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்தவர் யார்?, அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story