சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற “அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
“வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி,
அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, பூத் நிர்வாகிகள் மற்றும் புதிய நிர்வாகிகள் சேர்த்தல் பணிக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு ஜெயலலிதாவின் கனவு நினைவாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கடந்த தேர்தலில் ஒரு தொகுதி மட்டும் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. இந்த தேர்தலில் முதல் வெற்றியே திருச்செந்தூர் தொகுதியாகத்தான் இருக்கும். நிர்வாகிகள் கூட்டத்திலேயே இவ்வளவு பேர் வந்து உள்ளீர்கள். செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினால் பல மடங்கு அதிகமாகும். மக்கள் சக்தியை யாராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சியை யாரும் குறைகூற முடியாது.
கடுமையாக உழைக்க வேண்டும்
எதிர்க்கட்சியினர் நம்முடைய ஆட்சியை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளனர். வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்களான நாங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து 6 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெறுவோம். தற்போது புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கட்சியினர் உற்சாகமாக உள்ளனர். பூத் கமிட்டி அமைக்க வேண்டும். புதிய உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். வருகிற தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஞானபிரகாசம், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட இணை செயலாளர் செரினா பாக்கியராஜ், மாணவர் அணி செயலாளர் விக்ணேஷ், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவகர், ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story