ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா ஒரே நாளில் 139 பேர் குணமடைந்தனர்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 139 பேர் குணமடைந்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 4 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று புதிதாக 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 172 ஆக உயர்ந்தது. கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 3 இலக்க எண்களில் தொடர்ந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
52 பேர் பலி
இதேபோல் நேற்று மட்டும் 139 பேர் குணமடைந்தனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.
தற்போதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 96 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். 1,024 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு மாவட்டத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.

Related Tags :
Next Story