சட்டவிரோத கட்டுமான பணிகளை மறைக்க நடிகை கங்கனா குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்


சட்டவிரோத கட்டுமான பணிகளை மறைக்க நடிகை கங்கனா குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2020 1:20 AM IST (Updated: 11 Sept 2020 1:20 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத கட்டுமான பணிகளை செய்துவிட்டு அதை மறைக்க நடிகை கங்கனா ரணாவத் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என ஐகோர்ட்டில் மாநகராட்சி கூறியுள்ளது.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் பங்களா வீட்டில் நடந்த சட்டவிரோத புதுப்பிப்பு பணிகளை மாநகராட்சி நேற்று முன்தினம் இடித்தது. இதை எதிர்த்து கங்கனா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த கோர்ட்டு வீட்டை இடிக்க இடைக்கால தடைவிதித்தது.

இந்த மனு நேற்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழப்பத்தை ஏற்படுத்துகிறார்

மனுதாரர் (கங்கனா) மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் அனுமதித்த திட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக புதுப்பிப்பு பணிகளை செய்து உள்ளார். தற்போது அவர் சட்டவிரோமாக மேற்கொண்ட செயல்களை மறைக்க குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அவர் மும்பை மாநகராட்சி மீது பொய்யான, ஆதாரமற்ற, சம்மந்தமில்லாத புகார் தெரிவிக்கிறார். கோர்ட்டு உத்தரவு வந்தவுடன் இடிக்கும் பணியைநிறுத்தி விட்டோம். இதேபோல மனுதாரரும் கட்டிடத்தில் எந்த பணியையும் செய்யாமல் இருக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு கோர்ட்டு ஒத்தி வைத்தது.

Next Story