போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றனர் ஜாமீன் மனுவில் நடிகை ரியா தகவல்


போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றனர் ஜாமீன் மனுவில் நடிகை ரியா தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2020 1:29 AM IST (Updated: 11 Sept 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கட்டாயப்படுத்தி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக ஜாமீன் மனுவில் நடிகை ரியா கூறியுள்ளார்.

மும்பை,

இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கியதாகவும், அதற்காக பணம் கொடுத்ததாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் விசாரணையின் போது அதனை ரியா ஒப்பு கொண்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரியா தனது வக்கீல் மூலம் ஜாமீன் கேட்டு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக கூறியுள்ளார். மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.

நடிகை ரியாவின் ஜாமீன் மனு மீது இ்ன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என்று தெரிகிறது.

கைது தேவையற்றது

இதற்கிடையே ரியாவின் வக்கீல் சதீஷ் மானே கூறுகையில், “போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையின்போது அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்று உள்ளனர். அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து உள்ளார். மேலும் அவரை கைது செய்தது தேவையற்றது. நியாயம் இல்லாதது” என்றார்.

Next Story