புதுச்சேரியில் மேலும் 452 பேருக்கு கொரோனா


புதுச்சேரியில் மேலும் 452 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Sept 2020 2:40 AM IST (Updated: 11 Sept 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மேலும் 452 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 264 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 422 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்ற சித்தன்குடியை சேர்ந்த 86 வயது முதியவரும், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்த 50 வயது ஆண், உழவர்கரையை சேர்ந்த 68 வயது மூதாட்டியும், கொசப்பாளையம் வாணிதாசன் வீதியை சேர்ந்த 65 வயது முதியவரும், ஜிப்மரில் அரியாங்குப்பம் ராஜன்நகரை சேர்ந்த 74 வயது முதியவரும், ஏனாமில் 67 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர்.

90 ஆயிரம் பரிசோதனை

புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 90 ஆயிரத்து 643 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களில் 69 ஆயிரத்து 541 பேருக்கு தொற்று இல்லை. 18 ஆயிரத்து 536 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 4 ஆயிரத்து 794 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,689 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 105 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 ஆயிரத்து 389 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

353 பேர் இறப்பு

ஒட்டுமொத்தமாக 353 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 299 பேர் புதுச்சேரியையும், 20 பேர் காரைக்காலையும், 34 பேர் ஏனாம் பகுதியையும் சேர்ந்தவர்கள் ஆவர். மாகி பகுதியில் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

Next Story