மாணவர் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது நாராயணசாமி குற்றச்சாட்டு
மாணவர் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் 15 குழுக்களை ஏற்பாடுகள் செய்து கொரோனா பரிசோதனை தொடங்கி உள்ளோம். ஜிப்மரில் 1,500 பரிசோதனைகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளோம். இறப்பு விகிதத்தை குறைக்க வழிவகை செய்யுமாறு டாக்டர்களை கேட்டுள்ளோம். குணமடைவோர் விகிதம் அகில இந்திய அளவில் 76 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் இது 72 சதவீதமாக உள்ளது.
புதுவை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்களின் வருகை தொடர்பாக ஆய்வு செய்தேன். அப்போது 5 அரசு செயலாளர்களும் 10 சதவீத ஊழியர்களும் பணியில் இல்லை. பணிக்கு வராதவர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும். புதுவையில் பொலிவுறு நகர திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளிகளை திறக்க...
இதற்கிடையே செப்டம்பர் 21-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்த மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் கமலக்கண்ணனுடன் பேசி கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன்.
மேலும் தற்போது நீட் தேர்வு தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் புதுவை அரசின் கொள்கை. ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. புதுவையில் சென்டாக் மூலம் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வ நடைபெற்றது. ஆனால் மத்திய அரசு மாநில உரிமையை கையில் எடுத்து நீட் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட்டது.
மாணவர் விரோத அரசு
இதனை பல மாநிலங்கள் எதிர்த்தன. தொற்று வேகமாக பரவும் நேரத்தில் தேர்வினை நடத்த வேண்டாம் என்றோம். தற்போது வாகன வசதியில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது. எனவே தேர்வினை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றோம். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் அதை மத்திய அரசு உணரவில்லை. நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி பிரதமருக்கு கடிதமும் எழுதினேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதினார். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவிலை. மாணவர் விரோத அரசாக மத்திய அரசு செயல்படுகிறது.
ரத்து செய்யவேண்டும்
மாணவர்களின் உயிரை காப்பாற்ற பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Tags :
Next Story