பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருத்துறைப்பூண்டியில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருத்துறைப்பூண்டியில் நடந்தது
x
தினத்தந்தி 11 Sept 2020 3:30 AM IST (Updated: 11 Sept 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்்டு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் மின்மயானம் கட்டியும் திறக்க முயற்சிக்காத நகராட்சியை கண்டித்தும், நகர் முழுவதும் சுற்றி திரியும் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலு, விவசாய சங்க நகர துணை செயலாளர் சுந்தர், விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் வாசுதேவன், பொருளாளர் தாஜீதீன், இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் கார்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர் காந்தி, விவசாய தொழிலாளர் சங்க நகர துணை செயலாளர் நிஜாம், விவசாய சங்க நகர தலைவர் பக்கிரிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகத்தால் கட்டி முடிக்கப்பட்ட மின் மயானத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றித்திரியும் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Next Story