தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் கொரோனா நிவாரண நிதி வழங்க கோரிக்கை


தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் கொரோனா நிவாரண நிதி வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 Sep 2020 1:22 AM GMT (Updated: 11 Sep 2020 1:22 AM GMT)

கொரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி தென்காசியில் பீடி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி,

இந்திய ஜனநாயக மாதர் சங்கம், சி.ஐ.டி.யு. பீடி தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முறையிடும் போராட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் நுண் நிதி நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவை மீறி கொரோனா காலத்தில் சுய உதவிக்குழு பெண்களிடம் கட்டாய வசூல் மற்றும் அபராத வட்டி வசூல் செய்வதாக கூறியும், இதனை தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பீடி தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது. மாதர் சங்க தலைவி கற்பகம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாதர் சங்க நிர்வாகிகள் தங்கம், சங்கரி, மேனகா, மல்லிகா, சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் ஆரியமுல்லை, பொட்டு செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கணபதி, விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வேல்மயில், நிர்வாகிகள் லெனின்குமார், கிருஷ்ணன், பால்ராஜ் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story