மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Sept 2020 3:00 AM IST (Updated: 11 Sept 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு தளர்வு களால் மக்களும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். பொதுமக்களும் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வருகின்றனர். இருந்தபோதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கரூர் எம்,கே, நகரை சேர்ந்த 23 வயது பெண், பள்ளப்பட்டியை சேர்ந்த 57 வயது ஆண், பசுபதி பாளையத்தை சேர்ந்த 59 வயது ஆண், 60 வயது மூதாட்டி, காந்தி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், 6 வயது சிறுவன், தவுட்டு பாளையத்தை சேர்ந்த 35 வயது பெண்.

வேலாயுதம் பாளையத்தை சேர்ந்த 82 வயது மூதாட்டி, ராயனூர் சேர்ந்த 51 வயது பெண், வேலுச்சாமி புரத்தைச் சேர்ந்த 58 வயது பெண், தண்ணீர் பள்ளியை சேர்ந்த 39 வயது ஆண், தாந்தோணி மலையை சேர்ந்த 59 வயது பெண், 50 வயது பெண் 13 வயது சிறுவன், 70 வயது முதியவர், பசுபதி பாளையத்தை சேர்ந்த 80 வயது முதியவர், வெள்ளியணை சேர்ந்த 54 வயது பெண், வெங்கமேடு சேர்ந்த 63 வயது மூதாட்டி உள்பட 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story