மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது - ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று


மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது - ஒரே நாளில் 123 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 11 Sept 2020 3:45 AM IST (Updated: 11 Sept 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 2,888 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களை சேர்ந்த 7 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலில் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,881 ஆக குறைந்தது.

இதற்கிடையே நேற்று பள்ளிபாளையம் போலீஸ்காரர், திருச்செங்கோடு நகராட்சி பணியாளர் உள்பட மொத்தம் 123 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று குமாரபாளையத்தில் 19 பேர், திருச்செங்கோட்டில் 16 பேர், நாமக்கல்லில் 15 பேர், ராசிபுரத்தில் 11 பேர், பள்ளிபாளையத்தில் 7 பேர், பரமத்திவேலூர், வையப்பமலையில் தலா 3 பேர், ரங்கனூர், வேலகவுண்டம்பாளையம், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், ஜங்களாபுரம் மற்றும் குருசாமிபாளையம் பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், திருச்சி, ஈரோடு மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தலா ஒருவர் உள்பட 123 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,004 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 113 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,201 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 48 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 755 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story