மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் கேள்வி + "||" + Doesn’t the way your government treats me in the Marathas hurt you as a woman? Kangana Ranaut questions Sonia Gandhi
மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் கேள்வி
மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்தும் விதம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? என சோனியா காந்திக்கு நடிகை கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம் சாட்டினார். மேலும் மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதையடுத்து ஆளும் சிவசேனா கட்சிக்கும், நடிகைக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி பாலிஹில்லில் உள்ள நடிகையின் வீட்டை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. இந்தநிலையில் நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அன்புள்ள மரியாதைக்குரிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களே, மராட்டியத்தில் உங்கள் அரசு என்னை நடத்துவிதம் ஒரு பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா?
தலையிடவேண்டும்
டாக்டர் அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசனத்தின் உயரிய கொள்கைகளை கடைபிடிக்க உங்கள் அரசுக்கு நீங்கள் அறிவுறுத்த மாட்டீர்களா? பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை நீங்கள் அறிந்திருக்க கூடும். சட்டம்-ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின் அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பீடு செய்யும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறேன்.
நிதியுதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி தமிழக பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்படுகிறதா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.