நெல்லையில் தியாகி இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை


நெல்லையில் தியாகி இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 12 Sept 2020 5:03 AM IST (Updated: 12 Sept 2020 5:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை,

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஒருங்கிணைப்பாளர் தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.-த.ம.மு.க.

நெல்லையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட அவை தலைவர் மீரான், பகுதி செயலாளர் பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் தலைமையில் இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வட்ட செயலாளர் சிவனணைந்த பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பாளையங்கோட்டை மகாராஜா நகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், நிர்வாகிகள் முத்து பாண்டியன், சின்னத்துரை, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தின் சார்பில் ராமையன்பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்ட இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கொள்ளை பரப்பு செயலாளர் பாலமுருகன், மாநகர செயலாளர் பிரசாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் பாளையங்கோட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்ட இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story