பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,500-ஐ கடந்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,500-ஐ கடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஆயிரத்து 494 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், குணம் அடைந்த ஆயிரத்து 360 பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், மருத்துவ மனைகளில் சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
115 பேர் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், பெரம்பலூர் நகரை சேர்ந்த 4 பேர், கிராமிய பகுதிகளான பில்லங்குளம், சித்தளி, கூத்தூர், பென்னகோணம், பாண்டகப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 10 பேரும் திருச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 504-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story