காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி


காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
x
தினத்தந்தி 12 Sept 2020 4:00 AM IST (Updated: 12 Sept 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே மின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இது பற்றிய விவரம் வருமாறு:-

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பென்னேஸ்வரமடத்தை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 55). இவர், காவேரிப்பட்டணம் வடக்கு பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நெடுங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கிருஷ்ணன் என்பவரின் விவசாயம் தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் பழுதை சரி செய்ய நேற்று அவர் சென்றார்.

முன்னதாக அங்குள்ள மின் மாற்றியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மின்சாரம் தாக்கி பலியான ஊழியர் சென்றாயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story