உளுந்தூர்பேட்டை அருகே, போக்குவரத்து விதிகள் மீறல்; 300 பேர் மீது வழக்குப்பதிவு - 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே போக்குவரத்து விதிகளை மீறியதாக 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் 50 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பண்டை ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்தம் மற்றும் திருக்கோவிலூர் சாலை, ஆசனூர் சாலை, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு உள்பட 7 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும், மது குடித்துவிட்டும் வாகனம் ஓட்டி வந்தது என்று போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆவணங்கள் இல்லாமல் வந்த 50 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வாகனங்களின் உரிமையாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது மோட்டார் சைக்கிள்களை மீட்டுச் சென்றனர். இந்த வாகன தணிக்கையின் போது சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம் மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story