தாராவியில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 500 பேர் குணமடைந்தனர்
தாராவியில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 500 பேர் குணமடைந்து உள்ளனர்.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவியது. இதையடுத்து மாநகராட்சி மேற்கொண்ட பல நடவடிக்கைகளால் அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக அங்கு 10-க்கும் குறைவானவர்கள் தான் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் தாராவியில் திடீரென 33 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்றும் அங்கு 18 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தாராவியில் 2 ஆயிரத்து 901 பேருக்கு வைரஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 500 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் விவரங்களை மாநகராட்சி வெளியிடவில்லை.
தாதரில் 50 பேர்
இதேபோல தாதரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று அங்கு 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 966 ஆக அதிகரித்து உள்ளது.
மாகிமில் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 649 ஆகி உள்ளது.

Related Tags :
Next Story