ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாலாஜாபாத்தில் செயல்பட்டு வந்தது.
வாலாஜாபாத்,
வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாலாஜாபாத்தில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம் பஸ் நிலையத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால் கிராம மக்கள் சென்று வருவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். கிராம மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் வாலாஜாபாத் பஸ் நிலையத்திற்கு அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை காஞ்சீபுரத்திற்கு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் திறந்து வைத்த புதிய கட்டிடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, சீத்தா சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் உத்திரமேரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் கணேசன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் தென்னேரி வரதராஜுலு, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி நாகராஜன், அத்திவாக்கம் ரமேஷ், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் புத்தகரம் பழனி, வெங்கடேசன், வெள்ளேரியான், ராஜேந்திரன், கணபதி, மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story