கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா


கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Sept 2020 3:40 AM IST (Updated: 13 Sept 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதாவது உன்சூர் தொகுதி மஞ்நாத் எம்.எல்.ஏ.வுக்கும், எச்.டி.கோட்டை தொகுதி அனில்சிக்கமாது எம்.எல்.ஏ.வும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தனது வலையில் வீழ்த்தி வருகிறது. ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 60-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதில் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிலர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

2 எம்.எல்.ஏ.க்கள்

மைசூரு மாவட்டம் உன்சூர் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் எச்.பி.மஞ்சுநாத். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மஞ்சுநாத் எம்.எல்.ஏ. தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். அந்த பரிசோதனை முடிவில் மஞ்சுநாத் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில் சிக்கமாது. இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறியும் இருந்தது. இதனால் அனில் சிக்கமாது எம்.எல்.ஏ. கொரோனா பரிசோதனை செய்து இருந்தார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அனில் சிக்கமாது எம்.எல்.ஏ. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Next Story