மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2020 4:50 AM IST (Updated: 13 Sept 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு, இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு, புதிய கல்வி கொள்கை போன்ற மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது உஸ்மானி தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் அகமது நவ்வி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் அப்துல் ஜப்பார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் காசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், ஆதிதமிழர் பேரவை செயலாளர் கலைக்கண்ணன், தமிழ்புலிகள் மாவட்ட தலைவர் தமிழ்அரசு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமதுஅலி ஆகியோர் பேசினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story