தஞ்சை மாவட்டத்தில், 16 மையங்களில் இன்று நீட் தேர்வு-7,133 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்


தஞ்சை மாவட்டத்தில், 16 மையங்களில் இன்று நீட் தேர்வு-7,133 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 13 Sept 2020 3:30 AM IST (Updated: 13 Sept 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 16 மையங்களில் நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 133 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

தஞ்சாவூர்,

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 16 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் 7 ஆயிரத்து 133 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தஞ்சையில் பிளாசம் பப்ளிக் பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, தாமரை பன்னாட்டு பள்ளி, ரேடியண்ட் இன்டர்நேஷனல் பள்ளி, கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்.

வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 2 மையங்கள், பி.ஆர்.என்ஜினீயரிங் கல்லூரி, பிரிஸ்ட் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, கும்பகோணம் அம்மாசத்திரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, தாமரை பன்னாட்டு பள்ளி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி.

பேராவூரணியை அடுத்த வீரையன்கோட்டையில் உள்ள அட்லாண்டிக் இன்டர்நேஷனல் பள்ளி, பட்டுக்கோட்டையை அடுத்த உளூரில் உள்ள பிரிலியன்ட் பள்ளி, செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

நீட் தேர்வு நடைபெறும் மையங்களை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு அறைகளில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்களும் குறிக்கப்பட்டுள்ளது.

Next Story