நின்ற லாரி மீது மொபட் மோதி விபத்து: கோவில் பூசாரி உள்பட 2 பேர் பலி


நின்ற லாரி மீது மொபட் மோதி விபத்து: கோவில் பூசாரி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Sept 2020 4:00 AM IST (Updated: 13 Sept 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையம் அருகே நின்றிருந்த லாரி மீது மொபட் மோதிய விபத்தில் கோவில் பூசாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.

பெத்தநாயக்கன்பாளையம்,

வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் முனியன் (வயது 65). இவர் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர் பகுதியில் ஒரு கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு இரவு தனது நண்பர் ராமு (75) என்பவருடன் மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்று பழுதடைந்து, பெத்தநாயக்கன்பாளையம் அருகே புத்திரகவுண்டம்பாளையத்தில் ஒரு தனியார் பள்ளி எதிரே நான்கு வழிச்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இரவு நேரம் என்பதால் பழுது அடைந்து நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால், முனியன், ராமு ஆகியோர் வந்த மொபட் வேகமாக மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார், விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மொபட் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story