ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது
ராணிப்பேட்டை முத்துக்கடையில் பா.ஜ.க.வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
தமிழகத்துக்குரிய நிதி மறுப்பு, இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம், புதிய கல்வி கொள்கை மூலம் சமூக நீதி ஒழிப்பு, குலக்கல்வி முறைக்கு வாய்ப்பு, தமிழக அரசு வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு என்பது உள்ளிட்ட தமிழர், தமிழக விரோத போக்கை கடைப்பிடித்து வரும் பா.ஜ.க.வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பில் உள்ள எஸ்.டி.பி.ஐ, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் சுமார் 50 பேர் பங்கேற்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story