மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளை- 11 பேர் கைது + "||" + 11 arrested for robbing Rs 60 lakh near Sriperumbudur

ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளை- 11 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளை- 11 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு கடந்த 8-ந்தேதி காசாளர் பொன்ராஜ் அலுவலகத்தில் இருந்தார். அப்போது மர்மநபர்கள் திடீரென உள்ளே புகுந்து கத்தி முனையில் அலுவலகத்தில் இருந்த ரூ.6½ லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து கல்குவாரி மேலாளர் விமல் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.

விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த கோவர்த்தனன் (வயது 21), மகாராஜா (23), அப்துல் காதர் (22), ஆகாஷ் (21), வெங்கடேசன் (22), ஈஸ்வரன் (24), அருண்குமார் (22), சந்தோஷ் (24), ஜான் (21), சரத்கணேஷ் (22), ஜான் விக்டர் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.6½ லட்சத்தை கைப்பற்றினர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்தல்; 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு; 3 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனியின் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் இ.பாஸ் இல்லாததால் இருதய நோயாளியை தடுத்து நிறுத்திய போலீசார்
ஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் இ.பாஸ் இல்லாததால் இருதய நோயாளியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.