தடையை மீறிமெரினா கடற்கரைக்கு வந்தால் கடும் நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை


தடையை மீறிமெரினா கடற்கரைக்கு வந்தால் கடும் நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Sept 2020 1:56 AM IST (Updated: 14 Sept 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி மெரினா கடற்கரை வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

சென்னையில் ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். ஊரடங்கில் ஏதேனும் அத்துமீறலில் ஈடுபட்டால் ரூ.500-ம், முககவசம் அணியாவிட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டாலும் ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் அதனை மதிக்காமல் விடுமுறை தினங்களில் கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு தடையை மீறி வருவோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதிக்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு அதிகளவில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து, அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் இதுபோல் தடையை மீறி இனி மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story