மாவட்ட செய்திகள்

பெலகாவியில் சம்பவம் விமான நிலையத்திற்கு ஏ.கே.-47 துப்பாக்கியுடன் வந்த ராணுவ வீரர் பரபரப்பு - போலீஸ் விசாரணை + "||" + Soldier with AK-47 rifle arrives at airport in Belgaum

பெலகாவியில் சம்பவம் விமான நிலையத்திற்கு ஏ.கே.-47 துப்பாக்கியுடன் வந்த ராணுவ வீரர் பரபரப்பு - போலீஸ் விசாரணை

பெலகாவியில் சம்பவம் விமான நிலையத்திற்கு ஏ.கே.-47 துப்பாக்கியுடன் வந்த ராணுவ வீரர் பரபரப்பு - போலீஸ் விசாரணை
பெலகாவியில் உள்ள விமான நிலையத்திற்கு நேற்று ராணுவ வீரர் ஒருவர் ஏ.கே. - 47 துப்பாக்கியுடன் வந்தார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெலகாவி,

பெலகாவியை சேர்ந்தவர் நாயக் சுபேதார். ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் நாயக் சுபேதார் பெலகாவிக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் விடுமுறை முடிந்ததையடுத்து பணிக்கு செல்வதற்காக நாயக் சுபேதார், பெலகாவியில் உள்ள சம்ப்ரா விமான நிலையத்திற்கு வந்தார்.


அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நாயக் சுபேதாரை சோதனை நடத்தினர். அப்போது அவர் குண்டுகளுடன் கூடிய ஏ.கே-47 ரக துப்பாக்கியை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பறிமுதல்

இதையடுத்து அந்த துப்பாக்கியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் துப்பாக்கியை இந்திய சிறிய ஆயுத அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். மேலும் ராணுவ வீரர் நாயக் சுபேதாரையும், பெலகாவியில் உள்ள ராணுவ மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு வைத்து நாயக் சுபேதாரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மரிகாலா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி சம்பவம் எதிரொலி: புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருச்சி சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன.
2. மனைவி-மாமியார் கொலை வழக்கில் திருப்பம்: பெரம்பலூர் நண்பரிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை
திருச்சியில் மனைவி, மாமியார் கொலை வழக்கில் பெரம்பலூரை சேர்ந்த நண்பரை பிடித்து தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கணவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
3. குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
குட்கா ஊழல் தொடர்பான விசாரணை விரைவாக நடைபெற்று நீதி நிலைநாட்டப்பட வேண்டும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. சிறுவன், சிறுமியை கட்டி வைத்து சித்ரவதை இளம்பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை
உடன்குடி அருகே தோட்டத்தில் சிறுவன், சிறுமி கட்டி வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. நெல்லையில் பரிதாபம்: கல்லூரி மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை
நெல்லையில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை