மாவட்ட செய்திகள்

புதுவையில் கொரோனாவுக்கு 15 பேர் பலி புதிதாக 388 பேருக்கு தொற்று + "||" + In Puduvai, 15 people were killed by the corona and 388 were newly infected

புதுவையில் கொரோனாவுக்கு 15 பேர் பலி புதிதாக 388 பேருக்கு தொற்று

புதுவையில் கொரோனாவுக்கு 15 பேர் பலி புதிதாக 388 பேருக்கு தொற்று
புதுவையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 24 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 342 பேர் குணமடைந்து உள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.


புதுவை மாநிலத்தில் இதுவரை 99 ஆயிரத்து 480 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 77 ஆயிரத்து 60 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 856 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,696 ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 160 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர்.

15 பேர் உயிரிழப்பு

புதுவையில் இதுவரை 385 பேர் உயிரிழந்துள்ள னர். அவர்களில் 331 பேர் புதுச் சேரியை சேர்ந்தவர்கள். 20 பேர் காரைக்காலையும், 34 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது அரசு ஆஸ்பத்திரியில் அரியாங்குப்பம் மணவெளி ரோட்டை சேர்ந்த 54 வயது பெண்ணும், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சஞ்சய் காந்திநகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த 49 வயது பெண்ணும், நெட்டப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த 76 வயது மூதாட்டியும், பூமியான்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த 83 வயது மூதாட்டியும், புதுசாரம் வடக்கு தெருவை சேர்ந்த 52 வயது ஆணும், அரியாங்குப்பம் சுப்புராயபிள்ளை வீதியை சேர்ந்த 64 வயது ஆணும் பலியாகி உள்ளனர்.

ஜிப்மரில் அரியாங்குப்பத்தை சேர்ந்த 52 வயது ஆணும், மடுகரையை சேர்ந்த 48 வயது பெண்ணும், ரெயின்போ நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த 81 வயது முதியவரும், புதுசாரம் தென்றல் நகரை சேர்ந்த 70 வயது முதியவரும், ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த 67 வயது முதியவரும் உயிரிழந்தனர்.

உயிரிழப்பு 1.94 சதவீதம்

தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்த 73 வயது முதியவரும், லாஸ்பேட்டை மகாவீர் நகர் பகுதியை சேர்ந்த 64 வயது பெண்ணும், ரெட்டியார்பாளையம் எம்.ஏ.எஸ். காலனியை சேர்ந்த 80 வயது முதியவரும், முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 85 வயது முதியவரும் பலியாகியுள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.94 சதவீதமாகவும், குணமடைவது 73.56 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
2. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
3. நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பரிசோதனை
நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. நேற்று வந்தார். பின்னர் அவர், தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார்.
4. சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிப்பு 7 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
5. கொரோனாவுக்கு 2 மகன்கள் பலி: மனவேதனையில் தாயும் சாவு செவ்வாய்பேட்டையில் வியாபாரிகள் கடை அடைப்பு
சேலம் செவ்வாய்பேட்டையில் கொரோனாவுக்கு 2 மகன்கள் பலியான நிலையில் மனவேதனை அடைந்த தாயும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி செவ்வாய்பேட்டையில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை