நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலைமறியல் - 58 பேர் கைது
மயிலாடுதுறையில் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 58 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மயிலாடுதுறை காந்திஜி சாலையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில கொள்கை பரப்புரையாளர் தமிழன் காளிதாஸ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் ஜவகர், சிவராமகிருஷ்ணன், தொகுதி தலைவர் காளி வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனை தொடர்ந்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மயிலாடுதுறை போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேரை கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் காந்திஜி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story