கொரோனாவுக்கு 3 பேர் பலி புதிதாக 133 பேருக்கு பாதிப்பு


கொரோனாவுக்கு 3 பேர் பலி புதிதாக 133 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2020 11:57 PM GMT (Updated: 13 Sep 2020 11:57 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். மேலும், புதிதாக 133 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 534 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட திண்டல் கே.ஏ.எஸ்.நகர், வீரப்பன்சத்திரம், மொசுவண்ணவீதி, மாதவகிருஷ்ணாவீதி, சூரம்பட்டி காந்திநகர்காலனி, குமரன்வீதி, முனிசிபல்காலனி, ஆர்.என்.புதூர், ஆசிரியர் காலனி, கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம், ரெயில்வே காலனி, பழையபாளையம், வெட்டுக்காட்டுவலசு, கொல்லம்பாளையம், ஈ.பி.பி.நகர், காசிபாளையம், மாணிக்கம்பாளையம், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம், மாமரத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் பவானி, பெருந்துறை, சித்தோடு, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, அம்மாபேட்டை, டி.என்.பாளையம், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

3 பேர் பலி

நேற்று மட்டும் 85 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 432 பேர் குணமடைந்து உள்ளனர். 1,043 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே மாவட்டத்தில் 56 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் பவானி சீனிவாசபுரத்தை சேர்ந்த 73 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந் தேதி இறந்தார்.

இதேபோல் அந்த ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பவானியை சேர்ந்த 69 வயது முதியவரும், கவுந்தப்பாடியை சேர்ந்த 58 வயது ஆணும் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது.

Next Story