மாவட்ட செய்திகள்

அரியலூரில், மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று + "||" + In Ariyalur, 11 more people contracted corona

அரியலூரில், மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூரில், மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதகிளில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும் என மொத்தம் 11 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,271 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 2,374 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை சிகிச்சை பலனின்றி 37 பேர் இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 177 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 47 ஆயிரத்து 359 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரியலூர் நகராட்சி பகுதியில் இதுவரை மொத்தம் 594 பேரும், அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 550 பேரும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 465 பேரும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 491 பேரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 316 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 248 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 222 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 385 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.