மேல்மொணவூர், கருகம்பத்தூரில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேல்மொணவூர், கருகம்பத்தூரில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்,
வேலூர் மாவட்ட பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்மொணவூர், கருகம்பத்தூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயவேலு, காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில், பாலாற்று தண்ணீரை சதுப்பேரி ஏரிக்கு கொண்டு வர உடைந்த நிலையில் காணப்படும் நீர்வரத்து கால்வாய்களை சரி செய்ய வேண்டும். ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கருகம்பத்தூர் பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி விரிஞ்சிபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story