மாவட்ட செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் தகவல் + "||" + 2 lakh 87 thousand children in Thiruvarur district deworming tablets collector information

திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 713 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
திருவாரூர்,

திருவாரூர் நகராட்சி முதலியார் தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் இன்று (நேற்று) தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு 28-ந்தேதி அன்று மாத்திரை வழங்கப்படும். 1 முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதன் மூலம் ரத்தசோகை தடுக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் மேம்பட்டு கல்வியில் அதிக கவனம் செலுத்த உதவும். 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு மாத்திரையும் வழங்கப்படும்.

1,260 இடங்களில்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 1,260 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 87 ஆயிரத்து 713 குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முகாமில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர் பாலசந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமார் உள்பட பலர்் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு உலர் உணவு பொருட்கள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்
கிருஷ்ணகிரியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று கால நிவாரணமாக அரிசி, பருப்பு மற்றும் முட்டை உள்ளிட்ட உலர் உணவு பொருட்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார்.
2. குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 9 அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. மழையின் போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு கலெக்டர் ராமன் தகவல்
மழையின்போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
4. வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு
வேளாங்கண்ணியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
5. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்.