திருவாரூரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2020 12:46 AM GMT (Updated: 15 Sep 2020 12:46 AM GMT)

கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள் வழங்க கோரி திருவாரூரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

கொரோனா தொற்றால் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும். சரியான எடையில் ரேஷன் கடையில் பொருட்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர்் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

அதனை தொடர்ந்து திருவாரூர் கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்கராசு, சரவணன், முருகானந்தம், சண்முகம், சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story