மாவட்ட செய்திகள்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 200 கடைகள் அடைப்பு + "||" + In Nagaland, ration shop employees demonstrated and closed 200 shops, emphasizing the 10-point demands

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 200 கடைகள் அடைப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 200 கடைகள் அடைப்பு
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 200 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நாகப்பட்டினம்,

நாகை அவுரி திடலில் அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் பிரகாஷ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.


கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை பணியாளர்களை மருத்துவக்குழு காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும்.

200 கடைகள் அடைப்பு

மலை வாழ் பிரதேசங்களில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு சமவெளி பிரதேசங்களில் உள்ளது போல் முதல் 2 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை நாளாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும். கொரோனா வைரஸ் காலத்தில் சாலை விபத்தில் இறந்த பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 200 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவை காங். எம்.எல்.ஏ. ஆதரவாளர் கொலையில் கைதான 6 பேர் சிறையில் அடைப்பு 2 பேருக்கு வலைவீச்சு
எம்.எல்.ஏ. ஆதரவாளர் கொலையில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. கடைகள், ஓட்டல்கள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை
கடைகள், ஓட்டல்கள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
3. முழுஊரடங்கால் நெல்லை முடங்கியது தூத்துக்குடி, தென்காசியில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழுஊரடங்கால் நேற்று நெல்லை முடங்கியது. தூத்துக்குடி, தென்காசியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின.
4. முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
நெல்லை, தென்காசியில் நேற்று முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
5. முழு ஊரடங்கு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
கோவையில் முழு ஊரடங்கையொட்டி கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடின.

அதிகம் வாசிக்கப்பட்டவை