வீடுகளில் நகை-பணம் திருடியவர் கைது 5 பவுன் பறிமுதல்


வீடுகளில் நகை-பணம் திருடியவர் கைது 5 பவுன் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Sept 2020 6:43 AM IST (Updated: 15 Sept 2020 6:43 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வீடுகளில் நகை-பணம் திருடியவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 பவுன் நகையை கைப்பற்றினர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூட்டியிருந்த வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரமும், 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச்சென்றார். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சக்திவேல், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

5 பவுன் நகை பறிமுதல்

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் 2 வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரான திருக்கட்டளை சுந்தரநாயகிபுரத்தை சேர்ந்த செல்வம் (வயது 40) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான செல்வத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளைச்சிறையில் அடைத்தனர்.

Next Story