மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீசார் உள்பட 47 பேருக்கு கொரோனா + "||" + Corona for 47 people including 3 policemen in Dharmapuri district

தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீசார் உள்பட 47 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீசார் உள்பட 47 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீசார் உள்பட 47 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி மாரண்டஅள்ளியை சேர்ந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதேபோல் பென்னாகரத்தை சேர்ந்த போலீஸ்காரர், அரூரை சேர்ந்த போலீஸ்காரர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.


இதேபோல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 2 பெண் ஊழியர்கள், டி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்த 19 வயது மாணவி, பாலக்கோடு பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

1,927 ஆக அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,927 ஆக அதிகரித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை அருகே முன் விரோதத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தஞ்சை அருகே முன் விரோதத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. கெலமங்கலம் அருகே பஸ் டிரைவர் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
கெலமங்கலம் அருகே தனியார் பள்ளி பஸ் டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
3. வேலூர் மாவட்டத்தில் 3 வியாபாரிகள் உள்பட 122 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,849 ஆக உயர்ந்தது
வேலூர் மாவட்டத்தில் 3 வியாபாரிகள் உள்பட 122 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,849 ஆக உயர்ந்துள்ளது.
4. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் 2 மணி நேரம் போலீசார் சோதனை
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.
5. கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் குவிப்பு
வத்தலக்குண்டு அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.