தூத்துக்குடியில் பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அண்ணா உருவச்சிலை, அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில், அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை முன்னிலையில், அ.தி.மு.க.வினர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா பிறந்தநாளையொட்டி, கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு நகர அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் விஜய் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்தியா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், துணை செயலாளர் விஜயராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், சவுந்தர்ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் தமிழரசன் படிப்பகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்திற்கு நகர செயலாளர் கருணாநிதி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஏஞ்சலா, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி ஒன்றிய தி.மு.க. சார்பில் இனாம் மணியாச்சி பஸ்நிறுத்தத்தில் நடந்த விழாவில், ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பச்சைமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், இரும்பு ஆர்ச் அருகில் அண்ணா உருவப்படத்திற்கும், அமலிநகரில் உள்ள அவரது சிலைக்கும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத் நகர தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நாசரேத் நகர செயலாளர் ரவி செல்வகுமார் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் சுடலைமுத்து, நகர அவைத்தலைவர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாசரேத் கே.வி.கே. சாமி சிலை அருகே, காமராஜர் பஸ் நிலையம், நாசரேத் நகர தி.மு.க. அலுவலகம், சந்தி பஜார் ஆகிய இடங்களில் அண்ணா உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
காயல்பட்டினத்தில் நகர தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் முன்பு அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகர செயலாளர் முத்து முகமது கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், நகர துணை செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story