மாவட்ட செய்திகள்

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + Birthday To the idol of Anna Political parties Respect for flower wear

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க சார்பில் நெல்லை மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்பி. விஜிலா சத்யானந்த், மாநில அமைப்பு செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிகோட்டை செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தி.மு.க சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தி.மு.க. மாநகர அவைத்தலைவர் சுப.சீதாராமன் தலைமையில் ஆ.க.மணி, தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டி.பி.எம் மைதீன்கான் எம்.எல்.ஏ மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் துரை, மாவட்ட பொருளாளர் அருண்குமார் உள்பட பலர் சென்றனர்.

அ.ம.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ம.தி.மு.க சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தே.மு.தி.க சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சேரன்மாதேவி நகர அ.தி.மு.க. சார்பில் பஸ்நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்திற்கு, நகர செயலாளர் வழக்கறிஞர் பழனிகுமார் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கூனியூர் மாடசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், நகர இளைஞர் அணி செயலாளர் மாசானம், மாவட்ட பிரதிநிதி முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மகாதேவி அருகே உள்ள அனந்த கிருஷ்ணாபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவுக்கு வழக்கறிஞர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார்.

சேரன்மாதேவியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் மணிஷா செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வீரவநல்லூர் பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலைக்கு, நகர தி.மு.க. செயலாளர் அப்துல் ரகுமான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பத்தமடையில் நகர செயலாளர் காதர் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விக்கிரமசிங்கபுரம் நகர அ.தி.மு..க சார்பில் கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் கண்ணன் என்ற பலவேசம் தலைமையில் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவந்திபுரத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜய பாலாஜி, அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரா கோட்ஸ் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் வெங்கடசாமி, ஒன்றிய பொருளாளர் ராமன், அடையகருங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மதன கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி ஒன்றிய தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, பரப்பாடி அருகே உள்ள சகாயநகர் முதியோர் இல்லத்தில், நாங்குநேரி ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண்ணு 100 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், உணவு பொருட்களை இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலசுந்தர், மாவட்ட பிரதிநிதிகள் லிங்கேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மூன்றடைப்பு பஸ்நிறுத்தம் அருகே அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திசையன்விளை நகர தி.மு.க. சார்பில் மூன்று இடங்களில் தி.மு.க. கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலாளர் ஜான் கென்னடி, அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் சமூகரெங்கபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.பி.கே.செல்வராஜ், திசையன்விளை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்த நாளையொட்டி ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.