அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவரை அடித்துக்கொன்ற தந்தை கைது


அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவரை அடித்துக்கொன்ற தந்தை கைது
x
தினத்தந்தி 16 Sept 2020 7:23 AM IST (Updated: 16 Sept 2020 7:23 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட் டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரையூர் தெருவில் வசித்து வருபவர் ராமசாமி(வயது 65). இவரது மகன் மூர்த்தி(36). திருமணமான இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

ராமசாமிக்கும், அவரது மகன் மூர்த்திக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கரையூர் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் எதிர்ப்புறம் உள்ள கலையரங்க மேடையில் மூர்த்தி தூங்கிக்கொண்டு இருந்தார்.

அடித்துக்கொலை

அப்போது அங்கு வந்த ராமசாமி தூங்கிக்கொண்டு இருந்த மூர்த்தியை தனது மகன் என்றும் பாராமல் இரும்பு கம்பியால் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூர்த்தியை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story